உபுண்டு தமிழ் குழுமத்தில் இணைய செய்யவேண்டியவை

1) பயனர் விவர பக்கத்திற்குச் சென்று தங்களுக்கென ஒரு தனி பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

உபுண்டு விகியினுள் இக்கணக்கை பயன்படுத்தி பயனிக்கவும்.

2) தங்களைப் பற்றிய விகி பக்கம் ஒன்றை உருவாக்கவும்.

URL: http://wiki.ubuntu.com/<yourname>

<yourname> - வருகிற இடத்தில் தங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுக்கவும்.

தாங்கள் கொடுத்த பெயரில் ஏற்கனவே ஒரு விகி பக்கம் இல்லாத பட்சத்தில் அப்பக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் வேறு பெயரை தேர்ந்தெடுக்க வேண்டியது தான்.

தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிய பின்னர்...

3) சற்று முன் தாங்கள் உருவாக்கிய பயனர் கணக்கை பயன்படுத்தி லான்ஞ்பேட் வலைத் தளத்திற்குச் செல்லவும். தொடர்ந்து திரையில் வரும் பக்கத்தில் "Join" பட்டனைத் தட்டினால் போதும். தங்களின் உறுப்பினர் கணக்கு விவரம் நிர்வாகக்குழுவின் அங்கீகாரத்திற்கு அனுப்பப் பட்டு விடும்.

தமிழ் குழுமத்தின் பக்கத்தில் நம் குழுமத்தைப் பற்றிய விவரங்களை அறியலாம்.


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.


உபுண்டு தமிழ் குழுமம்

TamilTeam/Membership_HowTo (last edited 2008-08-06 16:34:54 by localhost)