tam


உபுண்டு 8.10 மற்றும் அதன் வழி வந்த பிற வெளியீடுகளுடன் கூடிய அறியப்பட்ட சிற்றிடர்களை இவ் ஆவணம் விவரிக்கின்றது.

வன்பொருள் தேவைகள்

உபுண்டு 8.10 இற்கு தேவையான குறைந்தபட்ச நினைவக அளவு 256 மெகாபைட்டுக்கள் ஆகும். ( சில வகை வரைகலை அட்டைகளின் பயன்பாடு காரணமாக உங்கள் நினைவக அளவின் ஒரு பகுதி கிடைப்பில் இல்லாமற்போகலாம்.)

குறைந்தபட்ச அளவிலான நினைவே கிடைக்கிறது என்கிற சூழ்நிலையில், இயல்பாக நிறுவத் தேவைப்படும் கால அளவைக் காட்டிலும் நிறுவலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு அதிகமாக இருக்கும். ஆயினும் நிறுவப்பட்டவுடன் ஏற்புடைய விதத்தில் கணினி பணியாற்றத் துவங்கும். குறைந்த அளவிலாக நினைவினைக் கொண்ட கணினிகள், பணிமேசைக்கான வட்டினை (Desktop CD) பயன்படுத்தி, ஏவல் மெனுவிலிருந்து "Install Ubuntu" தனைத் தேர்வு செய்து நிறுவியை மட்டும் தொடங்கி நிறுவிக் கொள்ளலாகும். "Try Ubuntu without any change to your computer" தனைத் தேர்வு செய்து முழுமையானதொரு பணிச்சூழலை அடைவதை அத்தகைய கணினிகளில் இதன் மூலம் தவிர்க்கலாம்.

நிறுவல்

பரிந்துரைக்கப்படும் பொதிகள் இயல்பாகவே நிறுவப்படும்

டெபியன் கொள்கை விளக்க கையேட்டிற்கு இணங்கி ('Recommends' களம் ஒரு பொதியுடன் அதன் முழுமையான (அதே சமயம் விதிவிலக்கான நிறுவல்களில்) நிலையில் கிடைக்கக்கூடிய பொதிகளைப் பட்டியலைத் தர வேண்டும் என டெபியன் கையேடு சொல்கிறது), பொதி நிர்வாக அமைப்பானது, Recommends: field of other installed packages as well as Depends: களத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொதிகளையும் இயல்பாகவே கொணர்ந்து நிறுவித்தரும். குறிப்பிட்ட பொதியொன்றுக்கு இங்ஙனம் நேருவதை தாங்கள் தவிர்க்க விரும்பினால் apt-get --no-install-recommends என்று பயன்படுத்தவும். இதனையே நிரந்தரமானதாக இருக்கும் படி தாங்கள் செய்ய விழைந்தால் /etc/apt/apt.conf கோப்பில் APT::Install-Recommends என இடவும். இது சில நிரல்களில் வசதிகள் சில விட்டுப்போகவும் வழி வகுக்கும் என்பதனை நினைவில் கொள்க.

புதிய பதிப்புக்கு மேம்படுத்தல்

உபுண்டு 8.04 பயனர்கள் வசதியான தன்னியக்க வழிமுறை மூலம் உபுண்டு 8.10 பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். பழைய உபுண்டு பதிப்புக்களைப் பயன்படுத்துபவர்கள் முதலில் 8.04 பதிப்புக்கு மேம்படுத்திக்கொண்டு அதன்பின்னர் 8.10 இற்கு மேம்பாடு செய்துகொள்ள வேண்டும். இது தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்களை http://www.ubuntu.com/getubuntu/upgrading என்ற தொடுப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

nVidia "legacy" பதிவொளி (Video) ஆதரவு

உபுண்டு 8.04 தனில் nvidia-glx-legacy மற்றும் nvidia-glx பொதிகளின் வாயிலாக கிடைக்கப்படும், nVidia வின் 71 மற்றும் 96 வழிவகைகளுக்கான தனியுரிம இயக்கிகள், உபுண்டு 8.10 உடன் கிடைக்கப்போகிற X.Org உடன் பொருந்தாது. nVidia TNT, TNT2, TNT Ultra, GeForce, GeForce2, GeForce3, GeForce4 சிப் வகைகளை பயன்படுத்துவோருக்கு இது பாதிப்பினை ஏற்படுத்தும். இத்தகைய கணினிகள் கட்டற்ற nv இயக்கிக்கு மேம்படுத்தப்படும். இவ்வியக்கிக்கு முப்பரிமாண முடுக்கத்திற்கான (3D acceleration) திறன் கிடையாது.

173 அல்லது 177 வழிவகை இயக்கிகளால் ஆதரிக்கப்படும் ஏனைய nVidia சிப் வகைகளை பயன்படுத்துவோர் nvidia-glx-173 அல்லது nvidia-glx-177 பொதிக்கு இற்றைப்படுத்தப்படுவர். ஆயினும், 96 மற்றும் 71 இயக்கிகளைப் போலல்லாது 173 மற்றும் 177 இயக்கிகள் SSE தனை ஆதரிக்க வல்ல CPU களுடன் மட்டுமே பொருந்த வல்லவை (உ.ம். Intel Pentium III, AMD Athlon XP or higher). மேம்படுத்தப்படுகிறபோது பழைய CPU களைக் கொண்ட கணினிகளும் nv இயக்கிக்கு இற்றைப்படுத்தப்படும்.

X.Org உள்ளீட்டுக் கருவிகள்

x.Org வடிவமைப்புக் கோப்பு (/etc/X11/xorg.conf) எலியம் (Mouse) மற்றும் விசைப்பலகைக்கான InputDevice entries பதிவுகளை கொண்டிருக்கிறது. ஆயினும் input-hotplug பயன்படுத்தப்படுவதால் அவை புறந்தள்ளப்படும். விசைப்பலகைக்கான வடிவமைப்புகளை இனி /etc/default/console-setup வழங்கும். அவற்றை மாற்ற sudo dpkg-reconfigure console-setup பயன்படுத்தவும். அதன் பின்பு, HAL மற்றும் X ஆகியன் மீளத் துவக்கப்பட வேண்டும் (உ.ம்., கணினியைத் மீளத் துவங்குவது உள்ளிட்ட செயல்களின் மூலம்).

X.Org evdev xmodmap பொருந்தாமை

X.Org 1.5 உடைய உள்ளீட்டு இயக்கி evdev ஆல் ஆக்கப்படும் X keycodes உபுண்டு 8.04 தனில் ஆக்கப்பட்டவைகளோடு பொருந்தாது. ~/.Xmodmap கோப்பினைக் கொண்டு விசைப்பிணைப்புகளை (keybindings) தாங்கள் வடிவமைத்திருந்தால், அதனை கைமுறையாக மாற்றவோ செயலிழக்கவோ செய்யவேண்டும்.

UbuntuStudio real-time kernel ஆதரவு

உபுண்டு 8.10 உடன் கிடைக்கப்பெறும் லினக்ஸ் 2.6.27 கருவிற்கான நிகழ் நேர கரு மாற்றுமாதிரி (Kernel Variant) எதுவும் கிடைக்கப்பெறவில்லை. நிகழ் நேர கரு ஆதரவு தேவைப்படும் உபுண்டு ஸ்டூடியோ 8.04 பயனர்கள் உபுண்டு ஸ்டூடியோ 8.10 விற்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இனங்காணப்பட்ட பிரச்சினைகள்

Intel 4965 வடமில்லா (Wireless) வசதியால் கணினி இடைநிறுத்தம்

லினக்ஸ் கரு வெளியீடு 2.6.27 உடனான, Intel 4965 வடமில்லா சிப் வகைகளுக்கான, iwlagn வடமில்லா இயக்கி, 802.11n பிணையங்களுடக் பயன்படுத்தப்படுகிற போது, கருவிற்கு இடர்களை ஏற்படுத்துகிறது. இச்சிக்கலால் பாதிக்கப்படுவோர் linux-backports-modules-intrepid பொதிதனை நிறுவிக்கொள்ளலாம். இது இவ்வியக்கியின் வழு போக்கும் புதிய இயக்கியை நிறுவித் தரும். (வழுவினை களைந்திட இயக்கியின் புதிய வெளியீடு தேவைப்பட்டதால், இத்தீர்வை பிரதான கருப் பொதியுடன் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்க இயலாது போனது.)

TCP timestamps

TCP பொட்டலங்களில் (RFC 1323) லினக்ஸ் 2.6.27 நேரங்களை இடும் தேர்வினை பதிவு செய்கிறது. இத்தேர்வு 1992 இலிருந்து இருக்கிறது. high-bandwidth-times-latency paths களில் திறன்கூட்டும் பொருட்டும் high-bandwidth paths களில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டும் இங்ஙனம் செய்யப்டுகிறது. இது முன்னர் தவறுதலாக விடுபட்டிருந்தது.

சில பயனர்களுக்கு இது சிக்கல்களை ஏற்படுத்துவதாக அறியக்கிடைத்துள்ளது. பயனருக்கும் இலக்கான வழங்கிக்கும் இடையே இருக்கக் கூடிய (உதாரணத்திற்கு, Verizon DSL பயன்படுத்தும் பலர் இத்தகைய சிக்கல் நேர்வதாக தெரிவித்துள்ளனர்) வழிமாற்றிகளால் (router) இங்ஙனம் நேருவது தெரிய வந்துள்ளது. தங்கள் இணைய இணைப்பு சரியாக பணிபுரிவதாக தங்களுக்கு நம்பிக்கையிருந்து சில தளங்களை பார்வையிடுவதில் சிக்கல் இருக்குமாயின் கீழ்காணும் ஆணையினை இடவும்.

sudo sysctl -w net.ipv4.tcp_timestamps=0

கணினியை மீளத் துவங்கும் போது இம்மாற்றம் செயலிழந்து விடும். இப்படி செய்வது பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது என்று வைத்துக் கொண்டால், செய்த மாற்றங்களை நிரந்தரமாக்க sudo editor /etc/sysctl.conf கொடுத்து கீழ்காணும் வரியை அக்கோப்பின் இறுதியில் சேர்க்கவும்:

net.ipv4.tcp_timestamps = 0

இதன் காரணம் தங்களிடம் இருக்கும் அல்லது தங்களுக்கு இணைய வசதி தரும் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள வழிமாற்றியாகும். தங்களது வழிமாற்றிக்கான புதிய மேம்பாடு கிடைக்குமாயின், அதனைத் தயாரித்தவது குறிப்புகளை அனுசரித்து அதனை மேம்மபடுத்தவும். அதே சமயம் லினக்ஸ் கருவின் மேலிடம் TCP timestamps தனை செயல்படுத்திய வண்ணமே இத்தகைய வழிமாற்றிகளும் இசைந்து பணிபுரியும் மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. உபுண்டு 8.10 வின் வெளியீட்டிற்கு பிந்தைய, நிலையான வெளியீடு ஒன்றின் மூலம் இம்மாற்றத்தினை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கப்படும்.

அணுகுக bug #264019, இது விஷயத்தில் மான்ரிவாவின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி.

Fortran பொருந்தமை

libg2c நிரலகம் உள்ளடக்கப்படாததால், Fortran இருமங்களை g77 உடன் ஒடுக்கி (compile) இயக்க இயலாது. -no-f2c கொண்டு இவ் இருமங்கள் உபுண்டு 8.10 வில் ஒடுக்கப்பட வேண்டும். பயனர்கள் தங்களது Fortran நிரல்களை gfortran கொண்டு ஒடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது சாத்திமில்லாத பட்சத்தில் உபுண்டு 8.04 பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

iSCSI ஏற்ற முறைமை

iSCSI இலக்குகளில் வைக்கப்பட்டுள்ள கோப்பு முறைமைகள் ஏவல் நேரத்தில் தானாகவே ஏற்றப்படாது போகலாம். /etc/fstab கோப்பில் இதற்குண்டான பதிவு இருந்தும், iSCSI இலக்கை அடைய பிணைக்கப்பட்ட ஈதர்நெட் இடைமுகப்பு தேவைப்பட்டால் இப்படி நேர்வதுண்டு. இதற்கு தற்காலிகத் தீர்வாக open-iscsi சேவையை தாங்கள் கைமுறையாக மீளத்துவங்கி கோப்பு முறையை, பிணைய அடைமுகப்பு துவக்கப்பட்டவுடன், ஏற்றம் செய்ய வேண்டும். சாதாரண ஈதர்நெட் இடைமுகப்புகளை கொண்ட கணினிகளுக்கு இதனால் பாதிப்புகள் இல்லை.

மேலும் அறிய: bug #227848.

IntrepidReleaseNotes/tam (last edited 2008-10-28 06:24:10 by 124)